திருவொற்றியூர் பகுதியில் உருக்கமாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

திருவொற்றியூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் உருக்கமாக பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தல் சந்திக்க உள்ளன. மேலும் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சி வைத்துள்ளது. அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் தகவல்.

admk

 மேலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் அவர், அவரது கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் .திருவொற்றியூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் மிக உருக்கமாக பேசினார்.

அப்போது அவர் கூறினார் தாயை இழிவு படுத்துகின்றனர் எனவும் மிகவும் உருக்கமாக கூறினார்.ஒரு தாயை எவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள் எனவும் மக்களிடம் முதல்வர் பழனிசாமி கூறினார். சாமானியர் ஒருவர் முதல்வர் ஆனால் அவரது தாய் பற்றி பேசுவீர்களா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிக உருக்கமாக பேசினார். முதல்வர் இப்படி என்றால் சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டார்.

இவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நிலைமை என்ன ஆகும் எனவும் அவர் கூறினார்.தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசியதற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். என்னுடைய தாய் ஒரு விவசாயி இரவு பகல் பாராமல் உழைத்தவர் பிரச்சாரத்தில் மிகவும் உருக்கமாக பேசினார்.

From around the web