முதல்வர் எடப்பாடி பழனிசாமி- பாஜக மாநிலத் தலைவர் முருகனுக்கு வாழ்த்து!!

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முருகனுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
 
eps

ஏப்ரல் ஆறாம் தேதியை தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் மறக்க மாட்டார்கள் காரணம் என்னவெனில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஆனது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேலும் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது திமுக. மேலும் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக தற்போது எதிர்க் கட்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் தேசிய கட்சியான பாஜக களமிறங்கி இருந்தன 20 ஆண்டுக்கு பின்னர் பாஜகவின் 4 எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் நுழைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.eps

 இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் முருகன் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார். இத்தகைய சூழலில் தற்போது பாஜகவில் பாஜக மாநில தலைவர் முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி  கூறப்படுகிறது.  மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முருகனுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மத்திய இணையமைச்சர் ஆன முருகன் சில உறுதிமொழிகளை கூறியுள்ளார் அதன்படி 2014 பின்னர் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோவாக குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழக மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படும் என்றும் இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முருகன் உறுதியளித்துள்ளார் மேலும் தமிழக பாஜக தலைவராக தொடர்வீர்கள என்ற கேள்விக்கு கட்சி தலைமை முடிவெடுக்கும் என முருகன் பதிலளித்துள்ளார்.

From around the web