திருக்கோவிலூர் பாஜக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம்!

திருக்கோயிலூர் பாஜக வேட்பாளர்  கலிவரதனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சிஅதிமுக கட்சி  மத்தியில் ஆளும் பாஜக கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. மேலும் எதிர்கட்சியான திமுக கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உள்ளது.  பல்வேறு கட்சிகள்  வேட்பாளர்களை அறிவித்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

bjp

அவர் தற்போது தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கலிவரதனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவருக்காக தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமெனவும் மக்களிடத்தில் தேர்தல் பரப்புரையில் கூறுகிறார்.

மேலும் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அதிமுக ஆனது பாஜகவின் அடிமை கட்சியாக உள்ளது எனக்கூறியதற்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார். மேலும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கட்சியுடன் சண்டை போட்டால் எப்படி மாநிலங்களில் உள்ள மக்களுக்கு நிதிகளை கொடுக்க முடியும் எனவும் அவர் கூறினார். மேலும் அவர் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் அவர் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டினார். அவர் தடுக்க முடியாத கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி தான் எனவும் அவர் பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web