தண்டனை கைதியும் முதல்வர் நிவாரண நிதிக்கு "5000 ரூபாய்" வழங்கினார்! யார் அவர்?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள ரவிச்சந்திரன் கொரோனா நிவாரண நிதியாக 5,000 ரூபாய் வழங்கினார்!
 
தண்டனை கைதியும் முதல்வர் நிவாரண நிதிக்கு "5000 ரூபாய்" வழங்கினார்! யார் அவர்?

தற்போது நாடெங்கும் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளனர். மேலும் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு நிவாரணப் பொருட்களும் இதில் ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்படி வழங்குவதால் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது. இதற்கு  பல்வேறு நாட்டு மக்கள் தொழிலதிபர்கள் போன்றோர் மத்திய அரசிற்கு நிவாரண நிதியாக பல கோடிகளையும் டாலர்களையும் செலுத்தி வருகின்றனர்.ravicharan

மேலும் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.  தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ளது திமுக. மேலும் முதல்வராக மு க ஸ்டாலின் உள்ளார். அவர் தலைமையில் தற்போது ஆட்சி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவு பணத்தினை கொடுக்கின்றனர் மேலும் ஒரு சில குழந்தைகளும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் சேர்த்து வைத்த பணத்தினையும் உண்டியல் பணத்தினையும் கொடுக்கின்றனர். தற்போது சிறையில் உள்ள தண்டனை கைதி ஒருவரும் முதல்வர் நிவாரண நிதிக்கு 5,000 வழங்கியதாக கூறப்படுகிறது.

இவர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் யார் என்றால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி அவர்களுடன் சேர்த்து 7 பேர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் ஆவார். மேலும் இவர் தான் சிறையில் செய்த வேலைக்கு கிடைத்த ஊதியத்தில் இருந்து இந்த கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் நிவாரண நிதிக்கு 5000 ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது.

From around the web