குமரியில் சரக்குப் பெட்டக துறைமுகம் அமைக்க படாது பிரச்சாரத்தில் முதல்வர்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் பழனிசாமி!
 
குமரியில் சரக்குப் பெட்டக துறைமுகம் அமைக்க படாது பிரச்சாரத்தில் முதல்வர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ளதால் தமிழகத்தில் ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெறுகிறது. ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியாக பாஜக, பாமக போன்ற கட்சிகளை வைத்து தேர்தலை சந்திக்கின்றன. மேலும் அதிமுக தரப்பிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக அறிவிக்கப்பட்டு அவர் மீண்டும் எடப்பாடி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

admk

மேலும் அதிமுக வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் தனது கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளர்களை ஆதரித்து  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் .அப்போது அவர் கூறினார் கன்னியாகுமரியில் வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது எனவும் அவர் பிரச்சாரத்தில் கூறினார். மேலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரிசீலனை செய்து துறைமுகம் அமைக்கப்படும் என பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தார் முதல்வர் பழனிசாமி.

மேலும் துறைமுக பிரச்சனை குறித்து திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்வார்கள் எனவும் அதனால் மக்கள் நம்ப வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web