விவிபேட் பழுதால்  மாற்று ஏற்பாடு-வேளச்சேரி நிகழ்வு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றது விதிகளுக்கு எதிரானது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த தேர்தலில் வாக்காளர் பலரும் தங்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி மேலும் அவர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று ஜனநாயக கடமையாற்ய மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு முகக்கவசம் கையுறை றிபோன்றவைகளும் வழங்கப்பட்டு அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு பதிவானது காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக நடைபெற்றது.

vote

மேலும் ஏழு மணிக்கு பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் கண்காணிப்புகள் மத்தியில் கவனத்துடன் பாதுகாக்கப்படுகிறது .தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். அவர் சில தினங்களாக தேர்தல் செய்திகளைப் பற்றி விளக்கமளித்தார்.  தற்போது அவர் கூறினார் இருசக்கரவாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட  விவிபேட் இயந்திரம் குறித்த சர்ச்சை எழுந்தது.இந்த நிகழ்வானது சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.

தற்போது வேளச்சேரி நடைபெற்ற இந்த நிகழ்வில் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டியளித்துள்ளார். அதன்படி  விவிபேட் இயந்திரம் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று தேர்தல் விதிகளுக்கு எதிரானது எனவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். மேலும் அந்த  இயந்திரம் பயன்படாத வாக்கு பதிவு இயந்திரம் என்றாலும் விவிபேட் 50 நிமிடம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் அந்த  விவிபேட்  இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த விளக்கம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு கூறினார்.

From around the web