சுதந்திர தினத்தன்று பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி

இந்திய நாட்டின் 73வது சுந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்த ஆண்டிற்கான பல்வேறு துறை சார்ந்த நபர்களுக்கு விருதுகள் வழங்கினார். அவற்றின் விவரம் கீழே: சிறந்த சமூகப்பணியாளருக்கான விருது, திருவான்மியூரில் உள்ள பாத்வே சோபின் நிறுவனத்தின் இணை
 
சுதந்திர தினத்தன்று பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி

இந்திய நாட்டின் 73வது சுந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்த ஆண்டிற்கான பல்வேறு துறை சார்ந்த நபர்களுக்கு விருதுகள் வழங்கினார். அவற்றின் விவரம் கீழே:

சிறந்த சமூகப்பணியாளருக்கான விருது, திருவான்மியூரில் உள்ள பாத்வே சோபின் நிறுவனத்தின் இணை நிறுவனருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மருத்துவருக்கான விருது, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் செ.வெற்றிவேல் செழியனுக்கு வழங்கப்பட்டது.

சுதந்திர தினத்தன்று பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி

அதனுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை அறுவைச் சிகிச்சைத்துறை மருத்துவர் வி.ரமாதேவிக்கு சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருது இந்திய விண்வெளி தலைவர் சிவனுக்கு வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மிகச்சிறந்த சேவை புரிந்தவருக்கான விருது வேப்பேரியில் உள்ள தொண்டு நிறுவனமான ஆப்பர்சுனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான பள்ளிக்கு வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கியதற்கான விருதை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனமான எவரெஸ்ட் ஸ்டேபிளேசர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் பெற்றது.

கல்பனா சாவ்லா விருது மீன் வளத்துறை துணை இயக்குனர் ரம்யா லட்சுமிக்கு வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் சண்முகவேல் செந்தாமரை தம்பதியினருக்கு துணிவுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

From around the web