சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி தொகுதியில் தேர்தல் ரத்து செய்ய கோரிக்கை!

தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஆகிய நாளைய தினம் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும்   மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்படுகிறது.தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் தங்களது வேலையை மிகவும் திறம்பட மிக்க செய்துவருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆனது தேர்தலுக்காக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

jayakumar

தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கிறார் சத்யபிரதா சாகு. தற்போது சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்து தற்போது பேட்டியளித்துள்ளார். அதன்படி அவர் ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய மனு அளித்ததாகவும் அவர் கூறினார். அதன்படி கொளத்தூர், காட்பாடி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை மற்றும் திருச்சி மேற்கு போன்ற ஐந்து தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்ய கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் வாக்காளருக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டை வைத்தார். திமுகவினர் கூகுளே மூலம் நவீன முறையில் பணம் பரிமாற்றம் செய்வதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.அவர் கோரிக்கை வைத்த 5 தொகுதிகளில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும், காட்பாடி தொகுதியில் துரை முருகனும் போட்டியிட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web