ஜொமைட்டோ சீருடையில் சிக்கன் விற்பனை செய்த இளைஞர் கைது

சென்னையில் ஜொமைட்டோ சீருடை அணிந்து வீடு வீடாக சிக்கன் விற்பனை செய்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கண்ணகி நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு இளைஞர் வீடு வீடாக சிக்கன் விற்பனை செய்து வருவதாகவும் அவர் ஆன்லைன் உணவு நிறுவனமான ஜொமைட்டோ சீருடை அணிந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போது சரவணன் என்ற
 

ஜொமைட்டோ சீருடையில் சிக்கன் விற்பனை செய்த இளைஞர் கைது

சென்னையில் ஜொமைட்டோ சீருடை அணிந்து வீடு வீடாக சிக்கன் விற்பனை செய்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த கண்ணகி நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு இளைஞர் வீடு வீடாக சிக்கன் விற்பனை செய்து வருவதாகவும் அவர் ஆன்லைன் உணவு நிறுவனமான ஜொமைட்டோ சீருடை அணிந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போது சரவணன் என்ற இளைஞர் ஒருவர் ஜொமைட்டோ சீருடை அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்

அவரை மடக்கிய காவல் துறையினர் அவருடைய பேக்கை பரிசோதனை செய்தபோது அதில் சிக்கன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்

இதுகுறித்த விசாரணையின்போது ஜொமைட்டோ சீருடை அணிந்தால் போலீசார் ஒன்றும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்

இதேபோல் வேறு சிலரும் ஜொமைட்டோ சீருடையில் பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வரும் தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்

From around the web