பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த சலுகையை பெறவிரும்பும் ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் வரும் 27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற ஜாதி அவசியம் இல்லை என்பதும், பொருளாதாரத்தில் பின் தங்கிய எந்த ஜாதியினரும் விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த புதுச்சேரி முதல்வர்
 

பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த சலுகையை பெறவிரும்பும் ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் வரும் 27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற ஜாதி அவசியம் இல்லை என்பதும், பொருளாதாரத்தில் பின் தங்கிய எந்த ஜாதியினரும் விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கட்டணம் ரத்து என்று அறிவித்துள்ளார். மேலும் அனைத்து கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவிப்பு செய்துள்ளார். இதனால் புதுவையில் உள்ள றுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஜாதி, மதம் பார்க்காமல் உண்மையாகவே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கும் இதுபோன்ற அறிவிப்புகள் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web