சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா? குடிமகன்கள் உற்சாகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. அதன்பின்னர் ஊரடங்கு தளத்தப்பட்டவுடன் சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மே 7-ஆம் தேதி முதல் நீதிமன்ற உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் சென்னையில் உள்ள குடிமகன்கள் இருந்தனர். அவர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது சென்னையில் கொரோனா தொற்று கடந்த சில
 

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா? குடிமகன்கள் உற்சாகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. அதன்பின்னர் ஊரடங்கு தளத்தப்பட்டவுடன் சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மே 7-ஆம் தேதி முதல் நீதிமன்ற உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன

இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் சென்னையில் உள்ள குடிமகன்கள் இருந்தனர். அவர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது

சென்னையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, ஆகஸ்ட் 8ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் சென்னையில் உள்ள குடிமகன்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்

சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுவது குறித்து சென்னை மாநகராட்சியிடம் டாஸ்மாக் அதிகாரிகள் கலந்து ஆலோசித்து வருவதாகவும் டாஸ்மார்க் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே ஆகஸ்ட் முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web