தி.நகருக்கு ஷாப்பிங் செய்ய போக வேண்டாம்: அரசு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பது தெரிந்ததே. அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தி.நகர் உள்ளிட்ட இடங்களுக்கு ஷாப்பிங் செய்ய மக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் கூறியபோது, பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,
 
தி.நகருக்கு ஷாப்பிங் செய்ய போக வேண்டாம்: அரசு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தி.நகர் உள்ளிட்ட இடங்களுக்கு ஷாப்பிங் செய்ய மக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் கூறியபோது, பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது என்றும் மாநகராட்சி சார்பில் அதன் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் கிருமி நாசினிகளை தெளித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் கட்டுமானங்கள் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே இல்லை என்பதால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதுதான் இப்போதைக்கு ஒரே வழி என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

From around the web