சென்னை புறநகர் ரயில்: தெற்கு ரயில்வே எடுத்த அதிரடி நடவடிக்கை

 

கொரனோ வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வித போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்பதும் ஆனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒருசில போக்குவரத்துக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

குறிப்பாக சமீபத்தில் சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டது என்பதும் ஆனால் அந்த ரயிலில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சிறப்பு புறநகர் ரயிலில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது 

சென்னை சிறப்பு புறநகர் ரயில்களில் அத்தியாவசிய பணிகளில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களும், ஊடக ஊழியர்களும் செல்வதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் செல்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும் ஒரு சில நாட்களில் அதற்கும் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

தற்போதைய நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் ஊடக ஊழியர்களுக்கு சிறப்பு புறநகர் ரயிலில் செல்ல அனுமதி அளித்துள்ளதால் அந்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

From around the web