கொரோனா எதிரொலி: சென்னை தலைமைச்செயலக பத்திரிகையாளர் அறை மூடல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. நேற்று சென்னையில் 1400 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சென்னையில் பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் நர்ஸ்கள் மருத்துவ ஊழியர்கள் ஆகியோர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது மட்டுமின்றி கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா வைரஸ்
 

கொரோனா எதிரொலி: சென்னை தலைமைச்செயலக பத்திரிகையாளர் அறை மூடல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. நேற்று சென்னையில் 1400 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் நர்ஸ்கள் மருத்துவ ஊழியர்கள் ஆகியோர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது மட்டுமின்றி கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் சென்னையில் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக சென்னை தலைமைச் செயலக பத்திரிகையாளர் அறை திடீரென மூடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பத்திரிகையாளர் சந்திப்பையும் பெரும்பாலும் தலைவர்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web