கொரோனாவை கூவிக்கூவி விற்கும் சென்னை ரெங்கநாதன் தெரு: அதிர்ச்சி புகைப்படம்!

 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் தனிமனித இடைவெளி என்பதே காணாமல் போய் விட்டதாக தெரிகிறது 

இன்று சென்னை ரங்கநாதன் தெருவில் தனிமனித இடைவெளி என்று பொதுமக்கள் கூடி ஷாப்பிங் செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த வருடம் தீபாவளி கொண்டாடாமல் இருப்பது நல்லது என ஏற்கனவே சென்னை மாநகராட்சி பொதுமக்களிடம் அறிவுறுத்திய நிலையில் கொஞ்சம் கூட தனிமனித இடைவேளை இல்லாமல் பொதுமக்கள் ஷாப்பிங் செய்து வருவது பெரும் அதிர்ச்சியாக உள்ளது

From around the web