தரவரிசையில் நாட்டிலேயே முதலிடம் "சென்னை ஐஐடி!!!"

பொறியியல் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்
 
IIT

தற்போது இந்தியாவில் அதிகமாக கல்லூரிகள் காணப்படுகின்றன. குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் எண்ணிக்கையானது அதிகமாக காணப்படுகிறது. மேலும் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் என் ஐ சி எப் ஆனது ஆண்டுதோறும் கல்லூரிகளின் பட்டியலைத் தர வரிசையின் அடிப்படையில் வெளிவிடும். தற்போது பொறியியல் கல்வி நிறுவன தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.IIT

அதில் நம் தமிழகத்தின் சென்னை ஐஐடி ஆனது நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. மேலும் சென்னை ஐஐடி ஆனது தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது இந்தியாவில் சிறந்த கல்லூரியை அதுவும் பொறியியல் கல்லூரியில் எது என்றால் சென்னை ஐஐடி என்று அனைவரும் கூறும் அளவிற்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில்  தமிழகத்திற்கு நல்லதொரு இடம் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் நம் தமிழகத்தின் வேலூர் மருத்துவ கல்லூரி மூன்றாவது இடத்திலும் சென்னை மருத்துவக் கல்லூரியில் 12வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது

From around the web