ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவது குறித்த விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான விவகாரம் குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது இதுகுறித்த மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க
 
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவது குறித்த விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான விவகாரம் குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது இதுகுறித்த மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

தமிழக கூட்டுறவு வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மத்திய அரசின் இந்த அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதும் இல்லாததால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என்றும், கூட்டுறவு சங்க உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால்தான் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web