சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு!

தேர்தல் அறிக்கைகள் விதிமுறைகளை மீறுகிறதா என ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், பல்வேறு வேட்பாளர்களை அறிவித்தன. அந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவையும் தாக்கல் செய்தனர். மேலும் தமிழகத்தில்  பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் சென்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார் .

election

இதற்கு எதிராக தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி  தனது முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் ஐ அறிவித்துள்ளது. மு க ஸ்டாலின் அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறார். தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மேலும் பல்வேறு விதிமுறைகளையும் கூறிக்கொண்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறதா? ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து இரண்டு மாதத்திற்குள் முடிவை வெளியிடவும் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

From around the web