நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சாதாரண மக்கள் உதவும் வண்ணமாக எளிதில் அணுகும் வகையில் பாஸ்டாக் முறை இருக்க வேண்டும் என நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
 

தேசிய நெடுஞ்சாலை ஆனது இந்தியாவின் வடக்கில் ஜம்மு காஷ்மீர் தொடங்கி தெற்கே கன்னியாகுமரிவரை நெடும் பாதையாக உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலங்களுக்கிடையே மாநில நெடுஞ்சாலைகளும் ,மேலும் மாவட்டங்களுக்கு உள்ளே மாவட்டசாலைகளும் மேலும்  மாவட்டங்களுக்கு இடையேயான சாலைகளும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதி மன்றம் ஆனது நெடுஞ்சாலைகள் அனைத்திற்கும் அறிவுறுத்தியுள்ளது.

high court

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கும் கட்டணம் நியாயமாக இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் 2019ஆம் ஆண்டு முடிவு பெற்றதால் தற்போது அந்த சுங்க கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்கக்கோரி திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப்  சகாயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி சாதாரண மக்களுக்கு உதவும் வகையில் பாஸ்டாக் முறை  அணுகும் முறை இருக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  சுங்கச்சாவடிகளில் அதிக பஸ் கட்டணம் வசூலிக்க முடியாது எனவும் கூறியது உயர்நீதிமன்றம். மேலும் சுங்கச்சாவடிகள் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் 60 நிலையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனளிக்கும் வண்ணமாக சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்டு குறைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web