சென்னையில் விநாயகர் சிலைகளை எங்கே கரைக்கலாம்: சென்னை ஐகோர்ட் தகவல்

விநாயகர் சதுர்த்திக்காக பொது இடத்தில் சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ அனுமதி கிடையாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தனிநபர் வீடுகளில் வைக்கும் சிலைகளை ஆற்றில் கரைக்கலாம் என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது முன்னதாக பொது இடத்தில் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ அனுமதி தர வாய்ப்பு இல்லை என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு தமிழக அரசு இதனை தெரிவித்துள்ளது என்பது
 

சென்னையில் விநாயகர் சிலைகளை எங்கே கரைக்கலாம்: சென்னை ஐகோர்ட் தகவல்

விநாயகர் சதுர்த்திக்காக பொது இடத்தில் சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ அனுமதி கிடையாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தனிநபர் வீடுகளில் வைக்கும் சிலைகளை ஆற்றில் கரைக்கலாம் என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது

முன்னதாக பொது இடத்தில் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ அனுமதி தர வாய்ப்பு இல்லை என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு தமிழக அரசு இதனை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் வீடுகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

இதனால் நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆங்காங்கே உள்ள சிறிய நீர்நிலைகளில் கரைத்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web