ரயில்களை இயக்க உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

 

தற்போது 65 சதவீத ரயில்கள் மட்டுமே இயங்கி வரும் நிலையில் முழுவதுமாக ரயில்களை இயக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். தற்போது 65 சதவீத ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் முழுமையாக ரயில்களை இயக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் 

train

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கொரோனா வைரஸ் தற்போது அதிகரித்து வரும் நிலையில் சூழ்நிலையை கணக்கில்கொண்டு ரயில்களை முழுவதுமாக இயக்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் ரயில்வே அதிகாரிகள் நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து எந்த அளவுக்கு ரயில்களை அதிகமாக இயக்கலாம் என்பதை முடிவு செய்யலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக தற்போது 65 சதவீத ரயில்கள் மட்டுமே இயங்கும் என்பது தெரியவந்துள்ளது

From around the web