கொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளி விடுமுறை குறித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது சென்னை மகாலிங்கப்புரத்தை சேர்ந்த ராஜவேலு என்பவர் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி மற்றும் நீதிபதி தமிழக அரசின் விளக்கத்தை கேட்டார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்,
 
கொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளி விடுமுறை குறித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது

சென்னை மகாலிங்கப்புரத்தை சேர்ந்த ராஜவேலு என்பவர் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி மற்றும் நீதிபதி தமிழக அரசின் விளக்கத்தை கேட்டார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எந்த பள்ளியிலும், மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட மறுத்து விட்டதோடு, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொடரும்படி தமிழக அரசுக்கு அறிவிறுத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது

From around the web