புதுச்சேரியில் ஆளுநருக்கு அதிகாரம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தர்வு

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னதாக மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பதும் இந்த
 
புதுச்சேரியில் ஆளுநருக்கு அதிகாரம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தர்வு

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னதாக மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பதும் இந்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

முன்னதாக புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு ஏற்பத்தான் துணை நிலை ஆளுநரால் செயல்பட முடியும் என வாதிட்டனர் என்பதும், யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளை கண்காணிக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடவும், கோப்புகளை ஆய்வு செய்யவும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக ஆளுனர் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web