கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை மருத்துவர்கள் சாதனை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான ஒருவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர் ஆசியாவிலேயே முதல்முறையாக கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தது சென்னை மருத்துவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குருகிராம் என்ற பகுதியை சேர்ந்த 48 வயது தொழிலதிபர் ஒருவருக்கு சமீபத்தில் கொரனோ தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவருடைய நுரையீரலிலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டதால் அவர் சமீபத்தில் சென்னையில்
 

கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை மருத்துவர்கள் சாதனை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான ஒருவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர் ஆசியாவிலேயே முதல்முறையாக கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தது சென்னை மருத்துவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குருகிராம் என்ற பகுதியை சேர்ந்த 48 வயது தொழிலதிபர் ஒருவருக்கு சமீபத்தில் கொரனோ தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவருடைய நுரையீரலிலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டதால் அவர் சமீபத்தில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அங்கு அவருக்கு முதலில் கொரோனாவுக்கு சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து குணமானார். அதன் பின்னர் அவருக்கு சமீபத்தில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் நுரையீரலை எடுத்து நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடிந்ததாக அந்த மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார். தற்போது தொழிலதிபரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது நுறையீரல் சிறப்பாக இயங்கி வருவதாகவும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது

ஆசியாவிலேயே முதல் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த சென்னை மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

From around the web