அண்ணா பல்கலை மீது சட்டரீதியிலான நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் கொரோனா மருத்துவ முகாம் அமைக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியை நாளை மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அனைத்து அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளும் கொரோனா முகாம்களாக மாற்றப்பட்டு வருகின்றன இந்த முகாம்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சோதனை செய்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த
 

அண்ணா பல்கலை மீது சட்டரீதியிலான நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் கொரோனா மருத்துவ முகாம் அமைக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியை நாளை மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அனைத்து அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளும் கொரோனா முகாம்களாக மாற்றப்பட்டு வருகின்றன

இந்த முகாம்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சோதனை செய்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியை கொரோனா பரிசோதனை செய்தவர்களை தனிமைப்படுத்துத பயன்படுத்த ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் கடிதம் எழுதியது

ஆனால் மாணவர் விடுதியை உடனடியாக காலி செய்ய முடியாது என்றும் மாணவர்களின் பொருட்கள் அதில் இருப்பதால் பல மாணவர்கள் வெளியூர்களில் இருப்பதால் இரண்டு நாட்களில் ஒப்படைக்க முடியாது என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் பதிலளித்தது

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அதிரடியாக நாளை மாலைக்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையுடன் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web