சென்னையில் எந்தெந்த கடைகள் திறந்திருக்கும்? மாநகராட்சி ஆணையர் பேட்டி

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் கல்விக்கூடங்கள் மால்கள் மற்றும் பெரிய கடைகள் உள்ளிட்ட முக்கிய வர்த்தக மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் சற்று முன் பேட்டி அளித்துள்ளார் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ’சென்னையில் பால் காய்கறி மளிகை பொருட்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்றும் இந்த கடைகளை மூடும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை
 
சென்னையில் எந்தெந்த கடைகள் திறந்திருக்கும்? மாநகராட்சி ஆணையர் பேட்டி

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் கல்விக்கூடங்கள் மால்கள் மற்றும் பெரிய கடைகள் உள்ளிட்ட முக்கிய வர்த்தக மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் சற்று முன் பேட்டி அளித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ’சென்னையில் பால் காய்கறி மளிகை பொருட்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்றும் இந்த கடைகளை மூடும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப மக்கள் கூட்டம் அதிகமாக செல்லும் பெருவணிக நிறுவனங்கள் மட்டுமே மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், எனவே அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்கி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

இருப்பினும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவும் என்றும் ஓரளவுக்கு மட்டும் அத்தியாவசியமான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

From around the web