4 ஆயிரத்தை நெருங்கிய ராயபுரம்: சென்னையில் மொத்தம் 20,993

சென்னையில் கடந்த சில நாட்களுக்காக கொரோனாவின் பாதிப்பு தினமும் 1000க்கும் மேல் அதிகரித்து கொண்டே வருவதால் சென்னையில் கொரோனாவை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சென்னை மாநகராட்சி சற்றுமுன் வெளியிட்டுள்ளது.. இதன்படி சென்னையின் 15 மண்டலங்களில் 20993 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 3717 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 2374
 
4 ஆயிரத்தை நெருங்கிய ராயபுரம்: சென்னையில் மொத்தம் 20,993

சென்னையில் கடந்த சில நாட்களுக்காக கொரோனாவின் பாதிப்பு தினமும் 1000க்கும் மேல் அதிகரித்து கொண்டே வருவதால் சென்னையில் கொரோனாவை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சென்னை மாநகராட்சி சற்றுமுன் வெளியிட்டுள்ளது.. இதன்படி சென்னையின் 15 மண்டலங்களில் 20993 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 3717 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 2374 பேர்களும், கோடம்பாக்கம் 2324 பேர்களும், தண்டையார்பேடை மண்டலத்தில் 2646 பேர்களும் திருவிக நகர் மண்டலத்தில் 2073 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 1864 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 1158 பேர்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1043 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவிக நகர், வளசரவாக்கம், அடையாறு, அண்ணாநகர் ஆகிய 8 மண்டலங்களில் மிக அதிக பாதிப்பு என்பதால் சுகாதாரத்துறையினர் இந்த மண்டலங்களில் திவீர கவனம் செலுத்தி வருகின்றனர்.

From around the web