ரங்கநாதன் தெருவில் மீண்டும் கடைகள் திறக்க அனுமதி: சென்னை மாநகராட்சி

ரங்கநாதன் தெருவில் செயல்படும் கடைகளில் அதிகளவு கூட்டம் காணப்பட்டதாலும், சமூக இடைவெளி பின்பற்றப்படாததாலும் நேற்று அந்த தெருவில் இருந்து அனைத்துக் கடைகளையும் அடைக்க மாநகராட்சி உத்தரவிட்ட நிலையில் தற்போது மீண்டும் கடைகளை திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது நேற்று மாலை சென்னை மாநகராட்சி ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை அடைக்க உத்தர்விட்டதும் இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் முறையாக
 

ரங்கநாதன் தெருவில் மீண்டும் கடைகள் திறக்க அனுமதி: சென்னை மாநகராட்சி

ரங்கநாதன் தெருவில் செயல்படும் கடைகளில் அதிகளவு கூட்டம் காணப்பட்டதாலும், சமூக இடைவெளி பின்பற்றப்படாததாலும் நேற்று அந்த தெருவில் இருந்து அனைத்துக் கடைகளையும் அடைக்க மாநகராட்சி உத்தரவிட்ட நிலையில் தற்போது மீண்டும் கடைகளை திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

நேற்று மாலை சென்னை மாநகராட்சி ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை அடைக்க உத்தர்விட்டதும் இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படும் என்று வியாபாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து, கடைகள் செயல்பட மாநகராட்சி அனுமதி வழங்கியது.

இதனையடுத்து மீண்டும் ரங்கநாதன் தெரு கடைகள் திறக்கப்படவுள்ளன. மேலும் கடைகளின் நுழைவாயிலிலேயே வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும், கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web