சென்னை கல்லூரி மாணவர் தற்கொலை: திருடிய பணத்தில் ஆன்லைனில் விளையாடியதால் விபரிதம்

வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து பணத்தை திருடி அந்த பணத்தில் ஆன்லைன் விளையாடி தோற்றதால் ஏற்பட்ட விரக்தி காரணமாக சென்னை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆன்லைனில் ரம்மி உள்பட பல்வேறு விளையாட்டுகளில் பணம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இளைஞர்களை கவர்ந்து வருகின்றன. இந்த விளம்பரத்தை நம்பி இந்த விளையாட்டை டவுன்லோட் செய்து பல இளைஞர்கள் விளையாடி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் பணம் சம்பாதித்தாலும்
 
சென்னை கல்லூரி மாணவர் தற்கொலை: திருடிய பணத்தில் ஆன்லைனில் விளையாடியதால் விபரிதம்

வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து பணத்தை திருடி அந்த பணத்தில் ஆன்லைன் விளையாடி தோற்றதால் ஏற்பட்ட விரக்தி காரணமாக சென்னை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆன்லைனில் ரம்மி உள்பட பல்வேறு விளையாட்டுகளில் பணம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இளைஞர்களை கவர்ந்து வருகின்றன. இந்த விளம்பரத்தை நம்பி இந்த விளையாட்டை டவுன்லோட் செய்து பல இளைஞர்கள் விளையாடி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் பணம் சம்பாதித்தாலும் பெரும்பாலானோர் இதில் தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை. பெரும் தொகையை இழந்த பலர் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் என்பவர் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை பணத்தை இழந்ததாகவும் இதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த கல்லூரி மாணவர் பகுதி நேரமாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்ததாகவும், வேலை செய்த நிறுவனத்தின் பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

இந்த செய்தியால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ள சமூக ஆர்வலர்கள் இனிமேலாவது ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே நீதிமன்றம் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்தியாவில் தெலுங்கானா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் அதே போல் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே லாட்டரி சீட்டு தடைகள் இருப்பதால் அதேபோல் ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது

From around the web