கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை கலெக்டர்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ்க்கு ஏற்கனவே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட பல விஐபிக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை மாவட்ட கலெக்டருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கொரோனா வைரஸ் சென்னையில் அதிகமாக பரவ ஆரம்பத்திலிருந்தே பொது மக்களை காப்பதற்காக சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். சுகாதாரத் துறையுடன் இணைந்து அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் தான் கொரனோ தொற்று சென்னையில் படிப்படியாக
 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை கலெக்டர்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ்க்கு ஏற்கனவே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட பல விஐபிக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை மாவட்ட கலெக்டருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா வைரஸ் சென்னையில் அதிகமாக பரவ ஆரம்பத்திலிருந்தே பொது மக்களை காப்பதற்காக சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். சுகாதாரத் துறையுடன் இணைந்து அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் தான் கொரனோ தொற்று சென்னையில் படிப்படியாக குறைய காரணமாக இருந்தது

இந்த நிலையில் கொரனோ தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சென்னை கலெக்டர் சீதாலட்சுமி அவர்களுக்கும் தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

ஏற்கனவே கோவை மாவட்ட கலெக்டர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆகியோர்களுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டு உள்ளது என்பதும் அவர்கள் சிகிச்சைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web