சென்னையில் ஓடத்தொடங்கியது பேருந்துகள்: பயணிகள் மகிழ்ச்சி

சென்னையில் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் இன்று முதல் ஓட தொடங்கியது. சென்னையில் இன்று அதிகாலை முதலே பேருந்துகள் ஓடத் தொடங்கியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து இன்று காலை முதல் பேருந்துகள் ஓடத் தொடங்கின. மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர் வரையிலும், ஜிஎஸ்டி சாலையில் கூடுவாஞ்சேரி வரையிலும், கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் வரையிலும்,
 

சென்னையில் ஓடத்தொடங்கியது பேருந்துகள்: பயணிகள் மகிழ்ச்சி

சென்னையில் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் இன்று முதல் ஓட தொடங்கியது. சென்னையில் இன்று அதிகாலை முதலே பேருந்துகள் ஓடத் தொடங்கியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து இன்று காலை முதல் பேருந்துகள் ஓடத் தொடங்கின. மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர் வரையிலும், ஜிஎஸ்டி சாலையில் கூடுவாஞ்சேரி வரையிலும், கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் வரையிலும், பூந்தமல்லி சாலையில் திருமழிசை வரையிலும், செங்குன்றம் சாலை பாடி வரையிலும் பேருந்துகள் இயக்க ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் சென்னையில் இன்று 3300 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு பேருந்தில் 24 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் ஒரு இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும் என்றும் நின்று கொண்டும், படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ய பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும் சென்னையில் இருந்து அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பயணிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

From around the web