விடுமுறை தினங்களில் சென்னை  கடற்கரைக்கு அனுமதி இல்லை!

விடுமுறை தினமாகிய இன்று மற்றும் நாளையும் சென்னை கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை!
 
விடுமுறை தினங்களில் சென்னை கடற்கரைக்கு அனுமதி இல்லை!

இந்திய 1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பண்டித ஜவகர்லால் நேரு இருந்தார். அதை தொடர்ந்து இந்திய நாடானது 1950ஆம் ஆண்டு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு ஜனவரி 26 குடியரசு தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் இருந்தார். மேலும் இந்திய அரசானது சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தியின் பிறந்த நாள் ஆகிய மூன்று தினத்தை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

ugathi

ஒவ்வொரு மாநிலத்திலும் பல அரசுகள் அந்தந்த மாநிலங்களின் சிறப்புகளை கொண்டு கூடுதலாக விடுமுறைகளை அறிவித்துள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள், தமிழ் புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்கள் உள்ளன. இன்றைய தினம் யுகாதித் திருநாள் தெலுங்கு ,கன்னட மக்களிடம் கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்றைய தினமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கன்னடம் மற்றும் தெலுங்கு மக்களுக்கு வாழ்த்து கூறியிருந்தார். இந்நிலையில் நாளைய தினம் தமிழகத்தில் தமிழர் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தற்போது தமிழக முழுவதும் கொரோனா  தலைவிரித்தாடுகிறது.

இதனால் கொரோனா தவிர்க்கவும் பல்வேறு விதிமுறைகளை விதித்து, அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் சில விதிக்கப்பட்டுள்ளன. யுகாதித் திருநாள் திருநாளான இன்று மற்றும் தமிழர் புத்தாண்டு ஆகிய நாளை தினம் சென்னை கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் சில தினங்களாக தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மதசார் ஊர்வலங்கள்போன்றவை நடைபெறுவதற்கு தடை விதித்ததை தொடர்ந்து தற்போது சென்னை மெரினா கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

From around the web