"செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் ஒன்றும் மெக்கானிக் பட்டறை "!ஆவேசமான பாஜக மாநில தலைவர்!!

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் பற்றி கேள்வி கேட்டதற்கு ஆவேசமாக பதிலளித்தார் தமிழக பாஜக மாநில தலைவர் வேல்முருகன்!
 
murugan

தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது, ஆளும் கட்சியாக உள்ளது. மேலும் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக கடந்த முறை தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் 20 ஆண்டுக்கு பின்னர் பாஜக சார்பில் 4 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் நுழைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நம் தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக உள்ளார் முருகன்.bjp

அவர் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு கடைசி நேரத்தில் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களை சந்தித்து சிலவற்றை கூறினார். அப்போது அவரிடம் செங்கல்பட்டு தடுப்பு மையம் பற்றி கேள்வி கேட்டதற்கு அவர் ஆவேசமாக காணப்படுகிறது. அதன்படி செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் ஒன்றும் லாரி பட்டறை கிடையாது என்றும் மருத்துவ குழுவின் ஆலோசனை பின்னர் உரிய நடவடிக்கை எடுத்து மத்திய அரசு செயல்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு பின்னர் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மாநில தலைவர் முருகன் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி உற்பத்தி மையம் ஒன்றும் மெக்கானிக் பட்டறை கிடையாது என்றும் அவர் கூறியதால் செய்தியாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் தடுப்பூசி உற்பத்தி மையத்தை மத்திய அரசு ஏற்று நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் முருகன் பேட்டியளித்துள்ளார்.

From around the web