பல்வேறு சலுகைகள்: பட்டயக் கணக்காளர் படிப்புக்கு கட்டண விலக்கு அறிவிப்பு!!

கொரோனாவால் பெற்றோரில் இருவரையோ ஒருவரையோ  இழந்த மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் படிப்புக்கு கட்டண விலக்கு
 

தற்போதைய நம் இந்தியாவில் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகிய நோய் என்றால் அதனை கொரோனா வைரஸ் என்று சொல்லலாம். மேலும் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தொடர்ச்சியாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்பட்டது. மேலும் நம் தமிழகத்திலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்பட்டது. மேலும் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகமாக காணப்பட்டது.death certificate

 இதனால் குடும்பத்தில் பெற்றோரையோ அல்லது பிள்ளைகளையோ இழந்து பல குடும்பங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரில் ஒருவரையோ, இருவரையோ இழந்த மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பட்டய கணக்காளர் நிறுவனமும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி பெற்றோரில் கொரோனா  நோயால் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்த  மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் படிப்புக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2023 மார்ச் 31ம் தேதி வரையான காலத்திற்கு இந்த கட்டண விலக்கு சலுகை பொருந்தும் என நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கட்டண விலக்கு பெற்றோரின் இறப்பு சான்று, அடையாள அட்டை நகலை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.

From around the web