மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு!முதல்வராக ஆட்சி செய்வார்! கருத்துக்கணிப்பு;

கேரளாவில் பினராய் விஜயன் ஆட்சி மீண்டும் தொடரும் என்று இந்தியா டுடே -ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு கூறியுள்ளது!
 
மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு!முதல்வராக ஆட்சி செய்வார்! கருத்துக்கணிப்பு;

சட்டமன்ற தேர்தல் ஐந்து மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம். இந்நிலையில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற அதே தினத்தில் அண்டை மாநிலமான கேரளா மற்றும் புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும்  மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனமானது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.pinarayi vijyan

அதன்படி கேரளாவில் மீண்டும் ஆளும் கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி தற்போது கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். மேலும் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி 104 முதல் 120 தொகுதிகளில் வெல்லும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி  20முதல் 36 தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பின் முடிவில் உள்ளது.

பாஜகவின் கூட்டணியும் 2 தொகுதிகள் வரை வெல்லலாம் என்றும் இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியாவின் கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது. அதனால் மீண்டும் கேரளாவில் முதல்வராக தொடர பினராயி விஜயன் அதிக வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.அதனால் கேரளாவில் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

From around the web