கன்னியாகுமரியில் கட்டுப்படுத்த முடியாத மழை பெய்ய வாய்ப்பு!!!

வெப்பச் சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்கு குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
kaniyakumari

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. ஆனால் பல பகுதிகளில் கோடை வெப்பத்தை ஒன்றுrain

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் காரணம் என்னவென்றால் அவை வெப்ப சலனத்தால் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் தென்காசி நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நெல்லை குமரியில் நாளைய தினம் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதை தொடர்ந்து மே 29, 30 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்கள் குமரி மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மே 31 ஆம் தேதியில் கோவை நீலகிரி தேனி உட்பட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் குமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தொடர்ந்து கன்னியாகுமரியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் புரண்டு ஓடுகிறது.

From around the web