இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு! 9 மாவட்டங்களுக்கு!

இன்று மாலை 9 மாவட்டங்களில்  இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது!
 
இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு! 9 மாவட்டங்களுக்கு!

தமிழக மக்கள் மத்தியில் கோடை காலம் என்று கூறுவது அனைவரும் கூறுவது மே மாதம் ஒன்று மட்டும்தான். இந்த மே மாதம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளது. ஆயினும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அது சுட்டெரிக்கிறது. மேலும் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கமானது தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் கோடை காலத்தில்  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தோடு மே மாதத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர்.

rain

இந்நிலையில் நேற்றைய தினம் இந்திய வானிலை ஆய்வு மையமானது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியது. மேலும் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங் களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியது. அதன்படி நேற்றைய தினம் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆனது தற்போது இன்பமான தகவல் ஒன்றை கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது . வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ஒன்பது மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ,வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது ,தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web