"சென்னை உட்பட 11 மாவட்டங்களில்" இன்று மழை பெய்ய வாய்ப்பு!!

சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது
 
rain

தற்போது நம் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி இருக்கிறது என்று கூறலாம்.  தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் மத்தியில் அவ்வப்போது வானிலை ஆய்வு மையமும் சில அறிவிப்புகளை கொடுத்துக்கொண்டே உள்ளது.weather

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தால் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி தேனி கோவை திண்டுக்கல் திருப்பூர் தென்காசி சென்னை  திருவள்ளூரில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர் விழுப்புரம் மற்றும் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தேனி திண்டுக்கல் திருப்பூர் தென்காசி உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web