தென் மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு! இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை!

தமிழகத்தில் கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மே மாதம் தான். மே மாதம் தமிழகத்தில் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அது தமிழகத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் ஆனது தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும் என்ற அச்சமும் மக்கள் மனதில் உள்ளது.

தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சி மற்றும் சோகமான தகவலை வெளியிட்டது. அதன்படி மகிழ்ச்சியான தகவலாக தென் மாவட்டங்களுக்கும் சோகமான தகவலாக இதர மாவட்டங்களுக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஏப்ரல் 12ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் வளிமண்டலத்தில் நாளை முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த சுழற்சியானது இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் றண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.