தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் 6 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது!
 
rain

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம். ஆனால் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து  காணப்படுகிறது. இது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆயினும் பல பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பாகவே அக்னி நட்சத்திரம் நம் தமிழகத்தில் விடைபெற்றது இது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இதன் மத்தியில் தமிழகத்தில் அவ்வப்போது கனமழை மற்றும் மிதமான மழை பெய்து, அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.wether

மேலும் இவை வெப்ப சலனம் காரணமாக உள்ளதாக கூறியுள்ளது. அதன்படி ஜூன் 26ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 27ம் தேதியில் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜூன் 28, 29 தேதிகளில் நீலகிரி கோவை திருப்பூர் தேனி திண்டுக்கல் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web