நீலகிரி ,கோவையில் "நாளை" கனமழைக்கு வாய்ப்பு!!

நீலகிரி கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
 
rain

தற்போது நம் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியது என்றே கூறலாம். தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும் பல பகுதிகளில் வெப்பநிலை படிப்படியாக குறைந்து காணப்படுகிறது. இது இதமான வானிலையே உருவாக்குவதாகும் காணப்படுகிறது. மேலும் வானிலை ஆய்வு மையமும் இதுகுறித்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.rain

நீலகிரி,கோவை மாவட்டங்களுக்கு நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பலத்த காற்று வீசுவதால் வீசும் என்பதால் அரபிக் கடல் பகுதிகளுக்கு ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் தஞ்சை பாபநாசம், வலங்கைமான் ,மஞ்சளாறு, காரைக்காலில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web