"ஆகஸ்ட் 21ல்" 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!!

வருகின்ற ஆகஸ்ட் 21ம் தேதியில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது
 
rain

தற்போது நம் தமிழகத்தில் வானிலை  மிகவும் சாதகமாக காணபடுகிறது. ஏனென்றால் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இன்று பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.rain

அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான தகவலை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதியில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த படி தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை பெரம்பலூர் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் ராணிப்பேட்டை நீலகிரி கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகத்தின் இதர மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் .

From around the web