இந்த ஐந்து மாவட்டத்திற்கு கன மழை வாய்ப்பு! "எந்தெந்த மாவட்டம்"?

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
rain

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலையானது இயல்பை காட்டிலும் அதிகமாகவே காணப்படுகிறது. ஆனால் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு கூட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆனது நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் பல  மாவட்டங்களில் வெப்பநிலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .weaather

சில தகவல்களை கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம் ,அதன்படி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காரணம் என்னவெனில் வெப்பச்சலனம் மற்றும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது .

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் சேலம் ஈரோடு நாமக்கல் திருவண்ணாமலையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மாவட்டங்கள் அனைத்திலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

From around the web