சென்னையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: டிசம்பர் 2015 திரும்புகிறதா?

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி சென்னை உள்பட பெரும்பாலான பகுதியில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் நவம்பர் 4ஆம் தேதியில் இருந்து சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சென்னை மழை குறித்த விவரங்களை பதிவு செய்து வரும் நிலையில் இதுகுறித்து அவர் கூறியபோது சென்னை மற்றும் 100 கிலோ மீட்டர் வரை உள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் கடலோர பகுதிகளில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் நல்ல மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்

இந்த மழை மேலடுக்கு சுழற்சி இலங்கை கடல் ஓரத்தில் தென்மேற்கு பகுதியில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் இந்த மழை நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

சென்னையில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளம் மீண்டும் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web