பி.எஸ்.என்.இல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை எப்போது?

 
பி.எஸ்.என்.இல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை எப்போது?

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 4ஜி சேவையை கடந்த சில வருடங்களாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் நிலையில் அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது 

இந்த நிலையில் அடுத்த மாதத்திற்குள் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான பணிகள் நிறைவடையும் என்று தொலைத்தொடர்பு துறையின் மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்னும் 18 முதல் 24 மாத காலத்திற்குள் அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி சேவை வழங்கும் பணிகள் நிறைவடையும் என்று இணை அமைச்சர் தெரிவித்துள்ளார் 

bsnl

மேலும் 4ஜிக்கான டெண்டர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் விரைவில் இந்த டெண்டர் விடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் போர்ஜி சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web