44 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு!

 
corona vaccine

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதற்கு தடுப்பு ஊசி செலுத்தி வருவதே காரணம் என்பதை அடுத்து தற்போது மேலும் 44 கோடி தடுப்பூசிகள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்தியாவின் பயன்பாட்டிற்காக் 44 கோடி தடுப்பூசி வாங்குவதற்காக மத்திய அரசு கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் 25 கோடி என்றும் கோவாக்சின் தடுப்பூசி 19 கோடி கொள்முதல் செய்ய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது 

இந்த தடுப்பூசிகள் இந்தியாவுக்கு டிசம்பர் மாதத்தில் வந்துவிடும் என்றும் வரும் செப்டம்பர் செப்டம்பர் மாதத்திற்குள் 30 கோடி பயாலஜிக்கல் இ தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 44 கோடி தடுப்பூசிக்காக ஆயிரத்து 500 கோடி மத்திய அரசு முன்பணமாக செலுத்த உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

From around the web