மதுரை விமான நிலையத்தை பற்றி மத்திய விமான போக்குவரத்து துறை பதில் தர ஆணை!

மதுரை விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த கோரிய வழக்கில் மத்திய விமான போக்குவரத்து துறை பதில் தர ஆணை பிறப்பித்துள்ளது!
 
மதுரை விமான நிலையத்தை பற்றி மத்திய விமான போக்குவரத்து துறை பதில் தர ஆணை!

முன்பு நாம் நடந்து சென்றோம் தற்போது பறந்து செல்லும் அளவிற்கு அறிவியல் விஞ்ஞானம் வளர்ந்துள்ளது . மேலும் தற்போது உலகம் முழுவதும் பல விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் குறிப்பாக தமிழகத்தில் 5 மாநகரங்களில் விமான நிலையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி சென்னையில் பன்னாட்டு விமான நிலையமும் மதுரை கோயம்புத்தூர் திருச்சி மற்றும் தூத்துக்குடியில் உள்நாட்டு விமான நிலையங்களும் உள்ளது குறிப்பிட தக்கது. விமானத்தில் தற்போது கொரோனா அச்சத்தின் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது.airport

இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறைக்கு தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது.அதன்படி மதுரை விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த கோரிய வழக்கில் மத்திய விமான போக்குவரத்து துறை பதில் தர ஆணையிட்டுள்ளது உயர்நீதிமன்ற கிளை.மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றக் கோரியும் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும்உபி குஷி நகர் விமான நிலையம்,திருப்பதி விமான நிலையம் போன்றவைகள் பன்னாட்டு நிலையங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மதுரை விமான நிலையத்தை மாற்ற அறிவிக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தனது மனுவில் தாக்கல் செய்துள்ளார். விசாரித்த நீதிபதி அமர்வு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை பதில் தர ஆணையிட்டது. மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டால் மதுரை மாநகரம் ஜெகஜோதியாக காணப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. தற்போது மதுரை நகரம் தூங்கா நகரம் என்றும் அழைக்கபடுகிறது குறிப்பிடத்தக்கது.

From around the web