மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடத்தப்பட வாய்ப்பில்லை!!

இந்தியாவில் மக்களின் எண்ணிக்கை என்பது இந்தியாவில் வாழும் மக்களின் பொருளாதாரம், கல்வியறிவு, இருப்பிட விவரம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், மொழி, மதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற பல விவரங்களைச் சேகரிக்க இந்திய அரசாங்கம் செய்து வரும் ஒரு முக்கிய பணியாகும் இந்தக் கணக்கெடுப்பானது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணியானது அதாவது 1872 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இதுவரை 15 கணக்கெடுப்புகள் நடைபெற்று
 
மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடத்தப்பட வாய்ப்பில்லை!!

இந்தியாவில் மக்களின் எண்ணிக்கை என்பது இந்தியாவில் வாழும் மக்களின் பொருளாதாரம்,  கல்வியறிவு, இருப்பிட விவரம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள்,  மொழி, மதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற பல விவரங்களைச் சேகரிக்க இந்திய அரசாங்கம் செய்து வரும் ஒரு முக்கிய பணியாகும்

இந்தக் கணக்கெடுப்பானது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணியானது அதாவது 1872 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடத்தப்பட வாய்ப்பில்லை!!

இதுவரை 15 கணக்கெடுப்புகள் நடைபெற்று முடிந்துள்ளன, அடுத்து 2021 ஆம் ஆண்டு முதல் புள்ளி விவரங்கள் அனைத்தும் செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும் என்று ஏற்கனவே ஆலோசித்திருந்த நிலையில், கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு நடத்தப்படுவது கடினமாகும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது நடத்தப்பட்டால் கொரோனா தொற்று மேலும் பரவலாம் என்று கருதப்படுவதால் இதுகுறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. முன்னாள் பதிவாளர் ஜெனரல்களான ஏ.ஆர். நந்தா, ஜே.கே. பாந்தியா போன்றவர்களுடன் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “கொரோனா மேலும் தீவிரமாக பரவி வரும் நிலையில், கணக்கெடுப்பு நடத்துவது கடினம். எனவே இப்போதைக்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இப்போதைக்கு எடுக்க முடியாது.” என்று ஆலோசனை வழங்கி உள்ளனர்.

எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பானது இந்த ஆண்டு நடத்தப்பட வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

From around the web