15,000 கோடி ரூபாய் மதிப்பில் செல்போன் உதிரிபாக தொழிற்சாலை:இபிஎஸ்!

அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாரை ஆதரித்து முதல்வர் தேர்தல் பரப்புரை!
 
15,000 கோடி ரூபாய் மதிப்பில் செல்போன் உதிரிபாக தொழிற்சாலை:இபிஎஸ்!

 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளது. அதில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. மேலும்ஆளும் கட்சி அதிமுக   பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி  வைத்துள்ளது. மேலும் எதிர்கட்சியான திமுக- காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி வைத்துள்ளது. மேலும் பல கட்சிகள் தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன.

admk

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறார்.ஓசூர் பைபாஸ் சாலையில் தேர்தல் பரப்புரையில்  தீவிரம் காட்டி வருகிறார். அவர் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாரை ஆதரித்து பரப்புரையில் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறார்.

 மேலும் ரூபாய் 5 ஆயிரம் கோடி முதலீட்டில் ஓசூர் பகுதியில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் பரப்புரையில் அவர் கூறினார். தொழிற்சாலைகள் மிகுந்த ஓசூர் பகுதி மேலும் சிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி கூறினார். ஓசூர் பகுதியில் 15 ஆயிரம் ரூபாய் கோடி மதிப்பில் செல்போன் உதிரிபாக தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது எனவும் பிரச்சாரத்தில் முதல்வர் பழனி சாமி கூறினார்.

From around the web