’நாம் தமிழர்’ கட்சியில் இருந்து திடீரென விலகிய பிரபலம்!

கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் சலசலப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜீவ் காந்தி என்பவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

 

கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் சலசலப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜீவ் காந்தி என்பவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் கடந்த 10ஆண்டுக்கும் மேலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. அதிமுக திமுக ஆகிய இரண்டு மாநில கட்சிகளையும் விமர்சனம் செய்ததோடு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளையும் விமர்சனம் செய்தது

மக்கள் மத்தியில் இந்த கட்சிக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்பட்டாலும் தேர்தல் அரசியலில் இந்த கட்சி இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒற்றுமையாக இருக்கும் கட்சி, கோஷ்டிகள் இல்லாத கட்சி என்ற பெயரெடுத்த இந்த கட்சியில் கடந்த சில நாட்களாக திடீரென சலசலப்பு ஏற்பட்டது

ஏற்கனவே பேராசிரியர் கல்யாணசுந்தரம் நாம் தமிழர் கட்சி குறித்து விமர்சனம் செய்துள்ள நிலையில் தற்போது மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி என்பவரும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் தற்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறிய போது ’அது ஒரு பேரின்ப கனாக்காலம், அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சீமான் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது

From around the web